மின்சார சோலார் காரை உருவாக்கியுள்ள ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த கணித ஆசிரியர்

Date:


(ஏ.என்.ஐ)

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் சூரிய சக்தியில் இயங்கும் மின்சார காரை உருவாக்கியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள டாங்மார்க் பகுதியைச் சேர்ந்த பிலால் அகமது என்ற ஆசிரியரே இந்த காரை உருவாக்கியுள்ளதுடன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திட்டத்தில் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு காரைத் தயாரிக்க விரும்புவதாகவும், ஆனால் நிதி நெருக்கடி காரணமாக அதைத் தொடர முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நான் ஊனமுற்றோருக்காக ஒரு காரைத் தயாரிக்க விரும்பினேன், ஆனால் நிதி நெருக்கடி அதை கடினமாக்கியது.

சூரிய சக்தியில் இயங்கும் மின்சார கார் பற்றிய எண்ணம் என்னைக் கவர்ந்தது. 10 ஆண்டுகளில் மேலும் பெட்ரோல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சமீபத்தில் செய்தித்தாள்களில் படித்தேன்.

1950-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட பல்வேறு சொகுசு கார்களை பார்த்து படித்து வருகிறேன் என்றார். மக்களுக்கு ஒரு ஆடம்பரமான உணர்வைக் கொடுக்க நான் எதையாவது செய்ய வேண்டும் என சிந்தித்தேன். இதன் பிரகாரமே இந்த சூரிய சக்தியில் செயற்பட கூடிய காரை உருவாக்கினேன்.

காஷ்மீரில், பெரும்பாலான நேரங்களில், இருண்ட வானிலை நிலவுகிறது. சூரிய ஒளி குறைந்த நாட்களிலும் அதிக செயல்திறனை அளிக்கும் சோலார் பேனல்களைப் பயன்படுத்தினேன் என தெரிவித்துள்ளார்.Share post:

Popular

More like this
Related

12. Loneliness – Upworthy

This text initially appeared on 01.28.22Nothing can ever...

Mira Sorvino, 54, shares heartbreaking post month after Paul Sorvino died at 83

Mira Sorvino has been 'dreading' the dying of...

Kim Kardashian and Kylie Jenner party up storm at Kendall’s 818 tequila bash

The celebrities had been out in full drive...