பண்டாரகம பகுதியில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

Date:


(எம்.வை.எம்.சியாம்)

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடொன்றில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 220  லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளது டன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக அட்டுலுகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சகோதரர்கள் இருவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் போது, பெரிய கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 220  லீட்டர் டீசல் மீட்கப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் ஒரு லீட்டர் டீசலை சுமார் 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பண்டாரகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பட்டுள்ளார்கள்.சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.Share post:

Popular

More like this
Related

Antony Blinken shelves China trip after spy balloon detected over US

China had insisted that the balloon was not...

Winterlude resumes activities following Friday shutdown, Skateway closed Feb 4-5

Article content material Winterlude was again in...

100 Million People at Risk – The Hidden Cost of Soaring Fertilizer Prices

Fertilizer is a vital part in fashionable agriculture,...