கந்தப்பளையில் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு

Date:


கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க்தோட்ட பிரிவான தேயிலை மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் இரண்டு அடி உயரம் கொண்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட உண்டியல் 29 ஆம் திகதி புதன் இரவு மர்ம நபர்களினால் உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் களவாடப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தின் யன்னல் பகுதியூடாக உள்ளே சென்ற திருடர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்ட உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் காணப்பட்ட பெருந் தொகையான பணம் களவாடப்பட்டு உண்டியலை ஆலய வெளிப்பகுதியில் வீசப்பட்டுள்ளது. 

இவ் ஆலய உண்டியலில் காணப்பட்ட பணம் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஆலய நிருவாகத்தினரால்  எடுக்கப்படாடத பணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தப்பளை பொலிஸார் மோப்ப நாய்யின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Share post:

Popular

More like this
Related

Clarkson keen to make call as Roos explore plan B

Loading“I’ll try to work one thing out over...

Real Housewives of Dubai Star Chanel Ayan Survived Circumcision

Talking her reality. The Actual Housewives of Dubai...

Yellowjackets Season 2: Cast, Release Date

"Yellowjackets" season two is on its approach. The...